Monday, July 22, 2013

205th Meeting : 23rd Dec 2012 : Silapadikaram

MRC meeting on 23rd Dec was another grand affair with a overwhelming response of the members to the talk on Silappadikaram by Shri Ramachandran.Now for the meeting summary, over to Ms.Meyyammai Shankar,our member whose review in chaste tamil is as below:
1 : அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்.
2 : உரைசால் பத்தினியை உயர்ந்தோரும் தொழுவர்.
3 : ஊழ்வினை உருத்து வந்தூட்டும்
என்று காப்பியம் துவங்கிய இளங்கோவடிகள் இதைப் படித்துணரும் நமக்கும் அற நெறிகள் கூறி காப்பியத்தை முடிக்கின்றார். செய்த செயலின் பயன் நம்மை எப்பிறவியிலும் விடாது. கோவலன் இப்பிறப்பில் நல்லவனே ! முற்பிறப்பில் வணிகம் செய்ய வந்தவனை ஏமாற்றிக் கொலை செய்ததால் இப்பிறப்பில் இவனும் ஏமாற்றப்பட்டு கொலைக்கு ஆளானான். பொய் கூறுதல் வாழ்க்கையில் கூடாது. நல்லொழுக்கம் உடையாரை நாடெல்லாம் போற்றும். ஒழுக்கம் தவறுதல் உயிரை இழப்பதாகும். நன்னெறியில் வாழ்தல் வேண்டும். அரசியலில் தவறு செய்தால் நிச்சயம் தண்டனைக்குள்ளாவோம். எப்பொழுதும் எச்செயலிலும் தவறான வழியினைப் பின் பற்றுதல் கூடாது என்ற வாழ்க்கை நெறிகளை காப்பியத்தின் இறுதி வலியுறுத்துவதாகச் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment