Sunday, February 9, 2014

9th Anniversary Meeting of MRC: 234th Meeting on 9th Feb 2014

இன்றைய தினம் மதுரை வாசகர் வட்டத்தில் நடை பெற்ற ஒன்பதாம் ஆண்டு விழாவில்  சிறப்பு விருந்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தின் பணி நிறைவு செய்த -நீதிபதி திருமதி பிரபா ஸ்ரீதேவன் ஆற்றிய உரையின் ஒரு பார்வை.  

சம உரிமை என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும் என்பது அவர் ஆற்றிய உரையின் தலைப்பு. 

சமுதாயத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு மக்களிடையே அடிப்படைக் காரணங்கள் இன்றியே மண்டிக் கிடக்கிறது. அது களையப்பட வேண்டு மென்றால் அதன் முதல் நிலை வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். ஒரு தாய், ஒரு மனைவி, ஒரு தங்கை,  ஒரு மகள் என்று ஒவ்வொருவரும் சமுதாயத்தையும் பார்க்க வேண்டும். தன் வீட்டில் தன் மனைவி மக்களுக்கு வழங்கப் படாத உரிமையை பொது இடத்தில் மட்டும் பிறருக்கு வழங்கி விட முடியாது.  எனவே வீட்டிலிருந்தே  பெண்ணுக்கு சம உரிமை வழங்கப் பட வேண்டும். 

சிறு வயதினரும் இளையவரும் சமுதாயத்தை பண்போடு நோக்குகின்ற மனப் பாங்கு பெற வேண்டும்.  பன்னெடுங் காலமாக நம்மிடையே இருந்து வருகின்ற பண் பாட்டை 
இன்றைய சமுதாயத்திற்கும் உணர்த்த வேண்டும். பெண் என்பவள் வலிமையற்றவள் - ஏதும் செய்ய இயலாதவள் - வீட்டில் சும்மா இருக்கக் கூடியவள் என்ற மனப்பான்மையை கை விட வேண்டும்.  

தன்னைப் போல் அவளும் சரிசமமாக வீட்டிற்காகப் பாடுபடக் கூடியவள் என்று எண்ணினால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் என்பதை தான் வழங்கிய தீர்ப்புகளை மேற் கோள் காட்டி எடுத்துரைத்தார். 

சட்டமும் நீதியும் வழங்குகின்ற தீர்ப்புகளீல் மனிதத் தன்மையும் இணைந்தால் பெண்ணை இவ்வாறு இழிவு படுத்தும் சமுதாயத்தின் போக்கும் மாறும்.  உலகின் எவ்விடத்திலும் இல்லாததல்ல இக்குறைபாடு. ஆனால் நம் சமுதாயத்தில் இன்றையச் சூழ்நிலையில் சமுதாயத்தை மிகவும் வாட்டி வதைப்பதாக இருப்பதற்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தன் வீட்டில் இருந்தே இச்சமத்துவ உரிமையைச் செயல் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று உரைத்த நம் பண்பாடு இந்தத் தலைமுறையினரைப் போய்ச் சென்றடையும். இதற்காக நாம் செயல் பட வேண்டுமென்றார். 

ஆக்கம்  ..... செல்வி ஷங்கர் @ மெய்யம்மை சிதம்பரம் Member MRC

Non-stop 234th meeting is no easy feet. Hats off to convenor CA.Suriyanarayanan for his perfect 'delivery' in every MRC meeting. As usual the anniversary meeting ended with dinner hosted my The Hindu Newspaper. Thanks to Aravind family for their presence in the anniversary meeting and continued support by sponsoring MRC meetings at Aravind Eye Hospital auditorium - all these 234 meetings.